திரு பிரேமராஜா அருள்ராஜ் (சனா)
கண்மகிழ22 JUN 1989, கண்நெகிழ14 MAR 2023
வயது 33
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) The Hague, Netherlands Milton Keynes, United Kingdom
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்படமாகவும், நெதர்லாந்து The Hague ஐ வாழ்விடமாகவும், தற்போது பிரித்தானியா Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரேமராஜா அருள்ராஜ் அவர்கள் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, லூர்து மேரி தம்பதிகள், காலஞ்சென்ற நல்லதம்பி, பர்வதம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பிரேமராஜா, அருள்மொழி தம்பதிகளின் மூத்த மகனும், விக்னேஷ்வரன் ஜெயந்தினி தம்பதிகளின் அன்பு மருகனும்,
கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமினி, ஜெனோதன், ரெமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், பிரவீன், அன்ரு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜீவராஜ், சற்குணராஜ், காலஞ்சென்ற அருள்ராஜ், தேன்மொழி, பொன்மொழி, காலஞ்சென்ற மணிமொழி, கிளிமொழி, கனிமொழி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ஐடா, சுகுணா, அண்ணாத்துரை, கருணாநிதி, கலியுகன் ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கி்ரியை பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.