திருமதி கௌரி கேதீஸ்வரநாதன்
பிறப்பு16 AUG 1952, இறப்பு09 APR 2023
அனலை வடலூர் அ.த.க வித்தியாலய முன்னாள் ஆசிரியர், முன்னாள் அதிபர்
வயது 70
அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Mississauga, Canada
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வாழ்விடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கௌரி கேதீஸ்வரநாதன் அவர்கள் 09-04-2023 ஞாயிறுக்கிழமை அன்று அனலைதீவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கேதீஸ்வரநாதன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன்(கனடா ) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சகிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீனிகா, ஹரினிஸா, அஸ்மிதா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
கௌசலா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வைத்தீஸ்வரமூர்த்தி, இராஜேஸ்வரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன், சுந்தரேஸ்வரி வெற்றிவேல், காலஞ்சென்ற ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதயகுமாரன் இலக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அனலைதீவு 2ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 12-04-2023 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 12:00 மணியளவில் அனலைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.