Sangathy
News

அனைத்து மத ஸ்தலங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை

Colombo (News 1st) அனைத்து மத ஸ்தலங்களையும் நிறுவனங்களையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் அனுமதியின்றி ஏராளமான நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பதிவு செய்யப்படாத மத ஸ்தலங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

US funded fortified rice shipments begin arriving at Colombo Port

Lincoln

Colombo (News 1st) பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Lincoln

X-Press Pearl: இழப்பீடு கோரும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy