பொரளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
Colombo (News 1st) பொரளை லெஸ்லி ரனகல மாவத்தையின் ரயில் கடவை அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த, அடையாளம் தெரியாத இருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
களனியை சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்காண காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், தப்பிச்சென்ற துப்பாக்கிதாரிகளைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.