Sangathy

Sangathy

சா/த பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று(23) நள்ளிரவு முதல் தடை

Colombo (News 1st) 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், முன்னோடி பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் இன்று(23) நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தர முன்னோடி பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுதல், பகிர்ந்தளித்தல், கையேடுகளை விநியோகித்தல், இலத்திரனியல் ஊடகங்களினூடாக தகவல்களை பரிமாறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் இன்று(23) முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த தடையை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி வரை 3568 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: