Sangathy

Sangathy

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் உள்ள பழக்கடையில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் உள்ள பழக்கடையில்  இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் உள்ள பழக்கடை ஒன்றில் இருந்தவர்கள் மீது நேற்றிரவு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பழக்கடையில் இருந்த இருவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

முகத்தை மூடிச்சென்றவர்களால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், குறித்த பகுதியில் காணப்படும் CCTV கெமராக்களை ஆய்விற்குட்படுத்துவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: