Sangathy
News

இவ்வருட இறுதிக்குள் உள்நாட்டில் 30% மருந்து உற்பத்தி – சுகாதார அமைச்சு

நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதனால்  பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2 வருடங்களில் நாட்டின் மருந்துகளுக்கான தேவையில் 70 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றிற்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க கூறினார்.

Related posts

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு குடல் அறுவை சிகிச்சை

Lincoln

வவுனியாவில் பரபரப்பு – ஆசிரியர்களுக்கிடையே அடிதடி!

Lincoln

UK’s new immigration system to come into force from January 1

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy