அமரர் மகாலிங்கம் ஆறுமுகம்
பிறப்பு11 AUG 1953, இறப்பு01 JUN 2015
ரதி நகைமாளிகை- உரிமையாளர் லண்டன், கிளிநொச்சி அய்யானார் traders, பரந்தன் அய்யானார் traders rice mill owner
வயது 61
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கிளிநொச்சி, Sri Lanka டென்மார்க், Denmark London, United Kingdom
திதி: 03-06-2023
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எட்டு உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டுதான் இருக்கின்றது
அப்பா எங்களுக்குத் துணையாய் எங்களைத்
தாங்கும் தூணாய் எங்களோடு நடைப்பயணம்
நடத்துவீர்கள் என்று நாம் எல்லாம் நம்பியே இருந்தோம்!
ஆனால் எந்தவித சலனமும் காட்டாமல்
சாவுக்கு சம்மதப்பட்டதேன் அப்பா
அப்பா உங்கள் பாசம் உருகாத நெஞ்சங்களையும்
உருக வைக்கும் சொரியாத கண்களையும்
கண்ணீர் சொரிய வைக்கும் நீங்கள்
எங்களை விட்டு தெரியாத
இடம் தேடி பறந்ததேனப்பா?
கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் உந்தன் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உன் முகத்தை
நான் யாரிடமும் இன்னும் அறியலையே…
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் உங்கள் குடும்பத்தினர்…