Sangathy News

அமரர் சுப்பையா சபாரத்தினம்

மண்ணில்03 JUL 1944, விண்ணில்01 OCT 2018
(பிரபல வர்த்தகர் -Aksha Sarl Ashwin Sarl- Paris 75017)
வயது 74
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Le Bourget, France

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சபாரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16-10-2022

எம் அன்புத்தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து
இன்று நான்கு ஆண்டுகள்
ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும்
அப்பா நீங்கள் எம்மோடு
இருக்கின்றீர்கள் என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும் பாசத்தையும்
எம்முள் விதைத்து எமை விட்டு
இறைவனடி சென்றீர்களே இன்னும்
வாழ்ந்திருக்கலாம் அப்பா நீங்கள் எங்களோடு.

எம்முயிர் தந்தையே எங்கள்
உள்ளங்களின் ஒளிவிளக்கே
சூரியனைக்கண்டு மலரும் தாமரையாய்
உங்கள் அன்புமுகம் பாராமோ அப்பா.

இறையருளோடும் உங்கள் ஆசிகளோடும்
எங்கள் வாழ்வின் கனவுகளும்
வளர்ச்சிகளும் நிஜமாகும்..
எம்மோடு நீங்கள் என்றென்றும்
கூடவே இருக்கின்றீர்கள் என்று
இப்பூவுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version