Sangathy News

அமரர் சாந்த அன்ரனிகுமார் கொஸ்தா42E

பிறப்பு22 JAN 1975, இறப்பு22 MAR 2022

வயது 47

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Brampton, Canada

 கொழும்பு ஜிந்துப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்த அன்ரனிகுமார் கொஸ்தா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-04-2023

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

என்னையும், உங்கள் மூன்று பிள்ளைகளையும்
தவியாய் தவிக்கவிட்டு – 47 வயதினிலே
தனியாக நீங்கள் பிரிந்து போனீங்கள்!
மனம் வந்து போனீங்களா? – நான்
தாங்குவேன் என்று தப்புக்கணக்கு போட்டீர்களா?

என் அன்புத் தெய்வமே!
இங்கே – நான் படும் பாட்டை…
உங்களிடம் மட்டுமே சொல்லியழ முடியுமையா!

பக்குவமாக நாம் வாழ்ந்து வந்தோமே! – கண்
பட்டது போல் நீங்கள் போய் விட்டீகள்!
பட்டுப் போனது எங்கள் வாழ்க்கை மட்டும் தானே!

அப்பா என்றும் உங்கள் நினைவில் வாழும் நாங்கள்
நீங்களும் எங்களுடன் என்றும் இருப்பீர்கள்
அப்பா தினமும் உங்களை நாங்கள்
பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version