Sangathy News

அமரர் மயில்வாகனம் ஸ்ரீகாந்தன்

பிறப்பு15 APR 1956, இறப்பு11 APR 2020

வயது 63

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Leinfelden, Germany

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும். ஜேர்மனி Leinfelden-Echterdingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் ஸ்ரீ காந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-04-2023

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்….

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க
உங்கள் முகம் காண…

மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ? எம்
கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version