Sangathy News

இளம் குற்றவாளிகளின் பயிற்சி பாடசாலையிலிருந்து 9 கைதிகள் தப்பியோட்டம் – சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்

Colombo (News 1st) பதுளை – தல்தெண பகுதியிலுள்ள இளம் குற்றவாளிகளின் பயிற்சி பாடசாலையிலிருந்து 09 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த கைதிகள் இன்று(17) அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்றவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினர்.

ஏனையோரை தேடும் பணிகளில் பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version