Sangathy News

மெல்பர்ன் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான ஸ்ரீலங்கன் விமானம் இன்று நாட்டிற்கு…

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்தில் கடந்த 15ஆம் திகதி தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான ஸ்ரீலங்கன் விமானம் இன்று(17) காலை 7.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த விமானத்தில் 17 விமான ஊழியர்களும் 218 பயணிகளும் வருகை தந்தனர்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 605 விமானம் கடந்த 15 ஆம் திகதி இரவு 10.25 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்தது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை கண்டறிவதற்கு ஸ்ரீலங்கள் விமான நிறுவனத்தின் 06 பொறியியலாளர்கள் கடந்த 15ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியா நோக்கி பயணித்தனர்.

திருத்தப்பணிகளின் பின்னர் குறித்த விமானம் இன்று(17) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

Exit mobile version