Sangathy News

உ/த பரீட்சை: மற்றுமொரு கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி 19ஆம் திகதி ஆரம்பம்

Colombo(News 1st) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் மற்றுமொரு கட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதிகளவான மாணவர்கள் தோற்றியிருந்த பொருளியல், விவசாயம், பௌத்தம் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இதன்போது ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

32 மத்திய நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதுவரை  2 பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 6 பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விஞ்ஞானப் பிரிவிலுள்ள பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மதிப்பீட்டு பணிகளுக்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இரண்டரை மாதங்கள் தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version