Sangathy News

3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று(17)

Colombo(News 1st) வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்படவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, மேல், வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வௌியாகியிருந்தன.

எனினும், அவ்வாறான அறிவிப்பொன்று எழுத்துமூலம் விடுக்கப்படாமையினால் தொடர்ந்தும் தமது பதவியில் தொடரவுள்ளதாக வார இறுதியில் கருத்து வௌியிட்ட ஆளுநர்கள் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி கடந்த 15 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

குறித்த 3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

Exit mobile version