Sangathy
News

காரைக்கால் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம்

Colombo (News 1st) இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காரைக்காலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்  நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் இறுதிக்கட்ட அனுமதி இதுவரை பெறப்படாததால் குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டார்.

இந்தக் கப்பல் சேவையை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததது.

பின்னர், மே மாத நடுப்பகுதி வரை கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதன் ஆரம்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

ரயில் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

John David

இந்திய மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மர்மப் பொருட்களை வீசிய இருவர் கைது; வௌியில் இரண்டு பெண்கள் கைது

John David

SL workers stranded in UAE due to expiration of their passports: Ambassador Indraratne

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy