சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு
Colombo (News 1st) இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 இலட்சத்திற்கும் அதிகமான வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த மாதம் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு அடுத்ததாக ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே அதிகமாக வருகை தந்துள்ளனர்.