Sangathy
News

உளவு செயற்கைக்கோளை ஏவும் வட கொரியாவின் முயற்சி தோல்வி

North Korea: முதல் உளவு செயற்கைக்கோளை ஏவும் தமது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

இந்த தகவல் வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

உளவு செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் வீழ்ந்துள்ளது.

வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்துவதாக அறிவித்ததால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

வட கொரியாவின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், எதிர்பார்த்த சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

முன்னதாக வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வட கொரியாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறியே வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சித்தது.

Related posts

Sinhala translation of Quran presented to Bharain Ambassador

Lincoln

2014ஆம் ஆண்டின் பின்னர் தமிழக மீனவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை – இந்திய மத்திய அரசு

Lincoln

Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy