Sangathy News

முல்லைத்தீவு நீதிபதியின் இராஜினாமா தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

Colombo (News 1s) முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியின் இராஜினாமா தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா கடந்த 29ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அண்மைக் காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட சில வழக்குகள் நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

குருந்தூர் மலை விவகாரத்துடன் தொடர்புடைய வழக்கு, கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகள் நீதவான் T.சரவணராஜா  முன்னிலையில் இடம்பெற்றன.

Exit mobile version