Sangathy News

பேங்கொக் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 14 வயது சிறுவன் கைது

Colombo (News 1st) பேங்கொக் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டினால் இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐவர் காயமடைந்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உயிரிழந்த இருவரும் சீனா மற்றும் மியன்மார் பிரஜைகள் என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வணிக வளாகத்திற்கு அருகாமையிலுள்ள பாடசாலையொன்றில் குறித்த சிறுவன் கல்வி கற்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதலை மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

Exit mobile version