Sangathy News

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) நீர்வெட்டு

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) சனிக்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் விநியோகக் கட்டமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை மேலும் கூறியுள்ளது.

Exit mobile version