Sangathy News

ஒலுவில் வௌிச்ச வீட்டிற்கு அருகில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

Colombo (News 1st) அம்பாறை – ஒலுவில் வௌிச்ச வீட்டிற்கு அருகில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(07) மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வௌிச்ச வீட்டிற்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நால்வரே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மின்னல் தாக்கியதில், ஒலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version