Site icon Sangathy News

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அனுமதி

Colombo (News 1st) அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து இதற்கு தேவையான ஒதுக்கீடுகள் கிடைக்கும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

அஸ்வெசும பயனாளர்களில் 12 இலட்சம் பேர் வலுவூட்டல் வேலைத்திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Exit mobile version