Site icon Sangathy News

மேலும் 15 மில்லியன் முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

Colombo (News 1st) மேலும் 15 மில்லியன் முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த முட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கிடைக்கும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 10 மில்லியன் முட்டைகள் தொடர்பான அறிக்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், முட்டை விநியோக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, சதொச விற்பனை நிலையங்களுக்கு நாளாந்தம் 2 மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படும் அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version