Site icon Sangathy News

ராகமயில் துப்பாக்கிச்சூடு; வர்த்தகர் உள்ளிட்ட மூவர் காயம்

Colombo (News 1st) ராகம – வல்பொல, கரிட்டாஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட  துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

49 வயதானவரும் அவரது தாயாரும் அயல் வீட்டில் வசித்த 17 வயது சிறுவனும் இதன்போது காயமடைந்துள்ளனர்.

நேற்று (14) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர்  துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயங்களுக்குள்ளான 49 வயதானவர் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர்கள் தொர்டர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Exit mobile version