Site icon Sangathy News

காரைநகர் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்றைய தினம் (17) இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மீனவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version