Site icon Sangathy News

பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

Colombo (News 1st) எதிர்வரும் பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக அறிவுறுத்தியுள்ளார். 

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், லங்கா IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் 50 வீத கையிருப்பை பேணுமாறும் எரிபொருள் நிறுவனங்களுக்கு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version