Site icon Sangathy News

அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்; காஸாவில் பதற்றம்!

காஸாவிலுள்ள அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 70 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏராளாமானோர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல்களுக்கான புதிய போர்நிறுத்தப் பிரேரணையை எகிப்து சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version