Site icon Sangathy News

மருந்து கொள்வனவு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் விசாரணை நிறைவு

Colombo (News 1st) மருந்து கொடுக்கல் – வாங்கல் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விசேட விசாரணையின் அறிக்கையை சுகாதார அமைச்சுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சிடமிருந்து அதற்கான பதில் கிடைத்ததன் பின்னர் விசேட விசாரணை அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

தரமற்ற மருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் தனது அறிக்கையில் தேடி ஆராய்ந்ததாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.

Exit mobile version