Site icon Sangathy News

தாயும் சேயும் சடங்களாக மீட்பு

இரத்தினபுரி, கெஹலோவிதிகம வம்பத்துஹேனேவில் உள்ள லைன் அறையொன்றில் இருந்து குழந்தையின் சடலமும், அக் குழந்தையின் தாயின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, சிறுவனின் 21 வயதுடைய தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அலபாத பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிவநாதன் வசந்தகுமாரியின் கணவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியமை நீதவான் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version