Site icon Sangathy News

ஹரக் கட்டாவுடன் தொடர்புகளை பேணிய சந்தேகத்தில் 6 பேர் கைது

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 6 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹரக் கட்டாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த சந்தேகத்தின் பேரில், வெலிகம மற்றும் அதுருகிரிய பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட   ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக, தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Exit mobile version