Site icon Sangathy News

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

Colombo (News 1st) மன்னாரில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – ஓலைத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளபட்ட ரோந்து நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 04 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த  22 மற்றும் 48 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

Exit mobile version