Site icon Sangathy News

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி நீக்கம்

Colombo (News 1st) இலங்கை மின்சார சபையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

சுகயீன விடுமுறையை பதிவு செய்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (19) இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இலங்கை மின்சார சபையின் காசாளர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

நுகர்வோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version