Site icon Sangathy News

கால்வாயில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு

Colombo (News 1st) புத்தளம் – ஆனமடுவ நகரிலுள்ள கால்வாயிலிருந்து இன்று(21) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது

ஆனமடுவ நகரிலுள்ள கால்வாயிலில் சடலமொன்று காணப்படுவதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வங்கியொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்ற 64 வயதான முதியவரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சடலம் மீதான விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version