Site icon Sangathy News

பெலியத்த துப்பாக்கிச்சூட்டில் அபே ஜன பல கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்பு

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த வௌியேறும் பகுதிக்கு அருகில் இன்று(22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதியின் வௌியேறும் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிபென்டர் வாகனத்தில் வந்த சிலர் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் பச்சை நிற கெப் வாகனத்தில் வந்த குழுவினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version