Site icon Sangathy News

Colombo (News 1st) நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் மக்கள் அறிந்துள்ளார்களா என Verité Research நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. 

சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்களை தாம் அறிந்திருக்கவில்லை என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 66% பேர் தெரிவித்துள்ளனர். 

எனினும், 34% பேர் அதனை அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 
 
நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சமூக ஊடகங்களை மக்கள் சுதந்திரமாக பாவிப்பது முடக்கப்படும் என 56% பேர் கூறியுள்ளனர்.

எனினும், 19% பேர் இந்த சட்டமூலம் சமூக ஊடகங்கள் தவறாக பாவிக்கப்படுவதை குறைக்கும் என கருத்துக்கணிப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

Exit mobile version