Sangathy News

சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

Colombo (News 1st) சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு இன்று(30) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை காலி முகத்திடல் பகுதியை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, காலை 6.00 மணி முதல் 8.30 வரையிலும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையிலும் இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

எதிர்வரும் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version