Sangathy News

வைத்தியர்களுக்கான கொடுப்பனவை தமக்கும் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்

Colombo (News 1st) பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(30) மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தாதியர்கள், நிறைவுகாண் ஊழியர்கள், இடைநிலை வைத்திய ஊழியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்தார்.

Exit mobile version