Site icon Sangathy News

இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்..!

 

CEYPETCO எரிபொருள் நிறுவனம் இன்று  (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி,  ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 363 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version