Site icon Sangathy News

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இலங்கை அணி அறிவிப்பு..!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பெப்ரவரி 2ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இத்தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் முழு நேர டெஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்ட தனஞ்சய டி சில்வாவின் பதவி இந்த தொடரிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இந்த அணியில் 3 பேர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விபரம் பின்வருமாறு;- தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்னே, நிசன் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், சதீரா சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், அசிதா பெர்னாண்டோ,விஷ்வா, பெர்னாண்டோ, கசுன் ரஜிதா, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு உதாரா, சமிகா குனசேகரா, மிலன் ரத்னாயேக்.

Exit mobile version