Site icon Sangathy News

மணிகண்டனை பாராட்டிய உதயநிதி : ஏன் தெரியுமா?

8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ‘லவ்வர்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் மணிகண்டனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மணிகண்டன் வெளியிட்டுள்ள பதிவில்,

“தொலைபேசி அழைப்பின் மூலம் வாழ்த்தியதற்கு நன்றி உதயநிதி ஸ்டாலின் சார். நீங்கள் எங்கள் ‘லவ்வர்’ படத்தை பார்த்து ரசித்தீர்கள் என்பது சந்தோஷமாக உள்ளது. இது எனக்கு இன்னும் சிறந்த கதாபாத்திரங்களை செய்ய ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version