Site icon Sangathy News

கடுவெல பகுதியில் துப்பாக்கிச்சூடு..!

கடுவெல, கொரதொட்ட பகுதியில் உள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக வந்த நபர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் மற்றுமொரு நபருடன் கடைக்கு வந்த சந்தேக நபர், மோட்டார் சைக்கிளை வீதிக்கு அருகில் நிறுத்தி, அதிலிருந்து இறங்கி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

38எம்எம் ரிவால்வரைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கப்பம் பெறும் சம்பவத்தின் காரணமாக நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Exit mobile version