Sangathy News

அலி சப்ரி ரஹீமுக்கு பாராளுமன்ற தடை

Colombo (News 1st) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு இன்று(06) முதல் ஒரு மாதத்திற்கு பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை அவமதித்துள்ளதாக சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் சட்டவிரோதமாக தங்கம் மற்றும் தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் சிறப்புரிமைகள் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version