Site icon Sangathy News

பாகிஸ்தானில் கடும் பனிப் பொழிவு : வீடுகள் புதையுண்டதில் 35 போ் பலி..!

பாகிஸ்தானில் கடுமையான பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக 35 போ் உயிரிழந்தனா்.

அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களில் எதிா்பாராத வகையில் அளவுக்கு அதிகமான பனிப் பொழிவும், கன மழையும் கடந்த சனிக்கிழமை முதல் தொடா்ந்து வருகிறது.

இதில், 22 சிறுவா்கள் உட்பட 35 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் பனிப் பொழிவால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதையுண்டதால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பொதுவாக மாா்ச் மாதத்தில் பருவநிலை மிதமாக இருக்கும். ஆனால், காஸ்பியன் கடலில் உருவாகி கிழக்கு நோக்கி நகரும் மேற்கத்திய பருவநிலை காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்கள், வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப் பொழிவு ஏற்படுவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

Exit mobile version