Site icon Sangathy News

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : இருவர் பலி..!

பாகிஸ்தானில் இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பேஷாவர் நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலையில் நேற்று (10) காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

தற்கொலைப்படை தாக்குதலால் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்த மூவர் தங்களது இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது குண்டு வெடித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதில் இருவர் உயிரிழந்தனர், மற்றொரு நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் அடிக்கடி அரங்கேறி வரும் சூழலில், அங்குள்ள பேஷாவர் நகரில் விடுமுறை நாளான நேற்று மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதால் இந்த குண்டுவெடிப்பால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

Exit mobile version