Sangathy News

நீல வர்ணங்களின் மோதல் வெற்றி தோல்வியின்றி நிறைவு

Colombo (News 1st) நீல வர்ணங்களின் மோதல் என வர்ணிக்கப்படும் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும், கல்கிசை சென். தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 145 ஆவது வருடாந்த பெருஞ்சமர் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் இந்த போட்டி இன்று (09) நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்கிசை சென். தோமஸ் கல்லூரி 297 ஓட்டங்களை பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரோயல் கல்லூரி 09 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களை பெற்ற நிலையில், இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸூக்காக சென். தோமஸ் கல்லூரி 04 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதற்கமைய, D.S. சேனாநாயக்க ஞாபகார்த்த கிண்ணம், 2023 ஆம் ஆண்டில் சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு
ரோயல் கல்லூரியிடமே தொடர்ந்தும் இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version