Sangathy News

கெஹலிய ரம்புக்வெல்ல பிணை விண்ணப்பம் சமர்ப்பிப்பு

Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

தமது பிணை கோரிக்கை மாளிகாகந்த நீதவானால் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டதாகவும், நீதவானின் பிணை கோரிக்கையை நிராகரிக்கும் உத்தரவை இடைநிறுத்தி, ஏதாவதொரு நிபந்தனையின் அடிப்படையில் தம்மை பிணையில் விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரின் இந்த பிணை கோரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (18) பரிசீலிக்கப்படவுள்ளது.

தரமற்ற மருந்து விநியோகம் தொடர்பான வழக்கில் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version