Sangathy News

18 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Colombo (News 1st) சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 8 பேர் உள்ளிட்ட 18 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்களுக்கு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன் படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 08 பேர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 பேருக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம், கல்கிசை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் E.M.M.S. தெஹிதெனிய  குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வளவு காலமும் பணிப்பாளராக  செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.P.A.K.பியசேகர களுத்துறை பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்படுள்ளார்.

Exit mobile version