Site icon Sangathy News

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு வீரர்களுக்கு அழுத்தம் :இரு இந்தியர்கள் நாட்டை விட்டு வௌியேற தடை..!

தற்போது பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் இந்திய முகாமையாளரான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா ஆகாஷ் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விஷேட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்திய பிரஜைகள், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய இலங்கை தேர்வுக் குழு தலைவருமான உபுல் தரங்க மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நீல் புரூம் ஆகியோரை ஆட்ட நிர்ணயத்திற்காக அழைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உபுல் தரங்க மற்றும் நீல் புரூம் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடி மற்றும் ஊழல் விசாரணைப் பிரிவிற்கும் அறிவித்துள்ளனர்.

Exit mobile version