Sangathy News

அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்மா

மலர்வு14 FEB 1930, உதிர்வு11 APR 2022
அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்மா
வயது 92
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொட்டாஞ்சேனை, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 19-03-2024

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே….!
வசந்தகால ஒளிவிளக்கே…!

மறுபடி வர வேண்டும் உன் மடியில்
தலை சாய்த்து உறங்க வேண்டும்…!
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த உத்தமியே
எங்கள் அன்புத் தெய்வமே!

அம்மா என்று குரல் எழுப்புகிறோம்
ஆனால் பதில் இல்லையே!
நீங்கள் எங்களைப் பிரிந்து
இரண்டு ஆண்டுகள் சென்றாலும்
எங்களோடு வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றீர்கள் அம்மா… !

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version